search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்"

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் பலியாகினர். #NetherlandShooting
    ஹாக்:

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.  #NetherlandShooting
    தஞ்சை திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் புகுந்து 60 பவுன் நகையை திருடிய மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செல்வம் நகரில் ஒரு தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு தஞ்சையை சேர்ந்த மணப்பெண் வீட்டார் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்ததால் வெளியூரிலிருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மணப்பெண் தனது திருமணத்திற்கு செய்யப்பட்ட 60 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து அதனை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவு மணப்பெண் அறைக்குள் புகுந்த கொள்ளையன் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றான்.

    அப்போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணப்பெண் உறவினர் ஒருவர் மர்மநபர் பையுடன் செல்வதை கண்டு திடுக்கிட்டார். அவர் சந்தேகமடைந்து திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்த உறவினர்கள் சிலர் எழுந்து வந்து மர்மநபரை விரட்டி சென்றனர்.

    இதுபற்றி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனை கண்ட மர்ம நபர் தன்னை பிடித்துவிடுவார்கள் என்று பயந்து கையில் வைத்திருந்த நகை பையை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான். அதனை கைபற்றி போலீசார் மணப்பெண் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    திருமண மண்டபத்தில் கொள்ளையன் புகுந்து 60 பவுன் நகையை திருடி செல்ல முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சாத்தான்குளம் அருகே இன்று மூதாட்டியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பூச்சிக்காடு ஆர்.சி. கோவில்தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மனைவி தெரசம்மாள் (வயது 68). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இலை பறிப்பதற்காக இன்று காலை தெரசம்மாள் சென்றார். 

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டான். 

    இது குறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து விட்டு தப்பி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். அவரது மனைவி சாவித்திரி (வயது 60). இவர் தினசரி அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்று வருவது வழக்கம்.

    அதன்படி இன்று சாவித்திரி வாக்கிங் சென்றார். ஏ.எம்.சி. சாலையில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் வந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் சாவித்திரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகர் வடக்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் தந்தை மயங்கியதால் 5 வயது சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாலூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பொன்னியம்மன் கோவிலை சேர்ந்தவர் குருபிரசாத். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது 5 வயது மகன் குமரகுரு.

    குருபிரசாத்துக்கு மது பழக்கம் உள்ளது. இவர் மகன் குமரகுருவுடன் ஓரகடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அங்கு மகன் குமரகுருவை கடையின் வெளியே விட்டு விட்டு குருபிரசாத் மது குடிக்க சென்றார்.

    இந்த நிலையில் மகனுடன் வெளியே சென்ற கணவர் குருபிரசாத் வீடு திரும்பாததால் மனைவி முருகம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் கணவரை தேடியபோது மதுக்கடை பாரில் குடிபோதையில் கணவர் குருபிரசாத் மயங்கி கிடப்பது தெரிந்தது. மகன் குமரகுருவை காணவில்லை. அவன் மாயமாகி இருந்தான்.

    இது குறித்து முருகம்மாள் ஓரகடம் போலீசில் புகார் செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கன்னா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தினார்.

    மதுக்கடை அருகே உள்ள மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வேஷ்டி, சட்டை அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் சிறுவன் குமரகுருவுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்த படி அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் குமரகுருவை கடத்தி செல்வது தெரிந்தது.

    அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வங்கி அதிகாரி போல் பேசி ரகசிய எண்ணை பெற்று ரூ.1¼ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சொக்கிக்குளம் எச்.ஏ.கே. ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள அரசுடமை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இவரிடம் செல்போனில் பேசிய மர்ம நபர் தான் வங்கி அதிகாரி என்றும், உங்களுக்கு குறுந்தகவலில் வந்துள்ள ரகசிய எண்ணை சொல்லுங்கள், சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    வங்கி அதிகாரி கேட்கிறார் என்ற ஆர்வத்தில் கார்த்திகேயனும் ரகசிய எண்ணை கூறியுள்ளார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் தனது வங்கி கணக்கை முடக் குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளர் அதை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    தொடர்ந்து மறுநாள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக மீண்டும் குறுந்தகவல் வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான கார்த்திகேயன் வங்கியை தொடர்பு கொண்டபோது, அவரது கணக்கை முடக்கம் செய்யவில்லை என தெரியவந்தது.

    இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கணக்கை முடக்காமல் மேலும் மோசடிக்கு வழி வகுத்ததாக வங்கி மேலாளர் மீதும் ரகசிய எண் மூலம் பணத்தை எடுத்த மர்ம நபர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை புதுராமநாதபுரம் ரோட்டில் தனியார் கான்கிரீட் கலவை நிறுவனம் உள்ளது. இங்கு வரவு-செலவு கணக்கை ஆடிட்டர் ஆய்வு செய்த போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த குமார் என்பவர் ரூ.20 லட்சம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர் மனைவியிடம் பணப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் பறித்துச் சென்றான்.

    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் குமரவேல். இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி ஷோபாராணி (வயது 56). இவர் நேற்று இரவு மகளுடன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார்.

    அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோவில் ஏறி தாயும், மகளும் சென்றனர். ஷோபாராணி கைப்பை ஆட்டோவின் வெளியே தெரிந்தபடி இருந்துள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதன், மோட்டார் சைக்கிளில் வந்து கைப் பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபாராணி, எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதில் பறிபோன கைப்பையில் 3 பாஸ்புக், ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, செல்போன், கார் ஆர்.சி.புக், மற்றும் ரூ.13 ஆயிரம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கில் வந்து வழிப்பறி செய்தவனை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ஜெய்ஹிந்த்புரம் சுந்தர் ராஜபுரம், ஜே.ஜே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (68) இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்த நேரத்தில், யாரோ கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    அவர்கள் அங்கிருந்த ரூ. 25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் அருகே மருந்து என்று கூறி தம்பதியிடம் வி‌ஷத்தை கொடுத்த மர்ம நபரால் மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Womankilled
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 75). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (65). இவர்களது மகன் முருகேசன். திருவாரூரில் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷ்ணுதோப்பில் உள்ள செல்வம் வீட்டுக்கு வந்தார். அப்போது வாடகைக்கு வீடு தேவைப்படுவதாகவும், தான் நாட்டு வைத்தியர் என்றும் கூறினார்.

    அந்த நபர் கூறியதை உண்மை என்று நம்பிய செல்வம் தனக்கும் மனைவிக்கும் மூட்டு வலி இருப்பதாக கூறி அதற்கு மருந்து இருந்தால் கொடுக்கும் படி கேட்டார்.

    இதையடுத்து அந்த நபர், செல்வத்திடம் வேப்பிலை, மஞ்சளை சேர்த்து அரைத்து வரும்படி கூறியுள்ளார். அவர்கள் அதனை கொண்டு வந்து கொடுத்ததும் அதில் தான் வைத்திருந்த ஒரு மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி விட்டனர்.



    அப்போது அந்த நபர் மயங்கி விழுந்த சகுந்தலா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீடு திரும்பிய செல்வத்தின் மகன் முருகேசன் தனது பெற்றோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களது உடல்கள் வீங்கி போய் இருந்தன. இதனால் பயந்து போன அவர் தனது பெற்றோர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகுந்தலா பரிதாபமாக இறந்தார். செல்வம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சகுந்தலாவிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அவர் கொடுத்த நாட்டு மருந்தை சாப்பிட்டு சகுந்தலா பலியாகி விட்டதால் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Womankilled
    பாகூரில் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து இந்திய கம்யூனிஸ்டு பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பாகூர்:

    பாகூரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் விஜயபாலன் (வயது 51). இவர், கட்சியின் தொகுதி குழு உறுப்பினராகவும், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இவருடைய வீடு பாகூர்பேட் லெனின் வீதியில் உள்ளது. வீட்டில் இருந்து தினமும் பாகூர் கன்னிக்கோவில் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு காலையில் வருவது வழக்கம்.

    இந்த அலுவலகம் துணிக்கடை ஒன்றின் மாடியில் இருக்கிறது. இன்று காலை விஜயபாலன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து விஜயபாலனை சரமாரியாக வெட்டினார். அதை விஜயபாலன் தடுக்க முயன்றார். இதனால் கை மற்றும் உடலில் வெட்டு விழுந்தது. தலையிலும் வெட்டினார்.

    அவருடைய அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த பொதுமக்கள் உள்ளே ஓடினார்கள். விஜயபாலனை வெட்டியவரை தடுத்து அவரை தாக்கினார்கள்.

    பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார்கள். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்தனர்.

    படுகாயம் அடைந்திருந்த விஜயபாலனை 108 ஆம்பு லன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விஜயபாலனை வெட்டிய நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவரது பெயர் ஸ்ரீதர் என்றும், வளவனூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பாகூரில் அவரது மனைவியின் பெற்றோர் வீடு உள்ளது.

    அங்கு வந்த இடத்தில் விஜயபாலனை அவர் வெட்டி உள்ளார். அவரை ஏன் வெட்டினார்? என்பது மர்மமாக இருக்கிறது. அது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    விஜயபாலன் வெட்டப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பாகூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

    உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த காரணிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவரது மனைவி பிரேமா (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மானாம்பதியில் இருந்து காரணிமண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வயலூர் கூட்ரோடு அருகே வந்தபோது மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் மோதுவதுபோல வந்து பிரேமா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    உடனே ஸ்டாலின் மற்றும் அருகில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் நோனாம்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தங்கச்சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை ஆய்வு செய்தார். அப்போது அந்த எண் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    மதுரையில் மூதாட்டியிடம் நூதனமாக பேசி நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் அஞ்சல் நகரில் உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சரோஜா (வயது 66).

    சம்பவத்தன்று சரோஜா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க நபர் அரசு திட்டங்களை பெற அடையாள அட்டை கொடுக்கப்பட உள்ளது. இதற்காக உங்களை புகைப் படம் எடுக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

    அப்போது நீங்கள் அணிந்து இருக்கும் நகை பழையதாக உள்ளது. என்னிடம் இருக்கும் நகையை அணிந்து கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று மர்ம நபர் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய சரோஜா தன்னிடம் இருந்த 3 பவுன் நகையை எடுத்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் புகைப்படம் எடுத்துவிட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவர் கொடுத்த நகையை பார்த்தபோது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

    தன்னிடம் நூதனமாக பேசி நகையை திருடிச் சென்ற மர்ம நபர் மீது கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ஈரோட்டில் இன்று அதிகாலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

    திண்டல்:

    ஈரோடு திண்டல் கே. எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி புஷ்பா (வயது 50) .

    கணவன்-மனைவி இருவரும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியூர் செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிச் செயின்) திடீரென பிடித்து இழுத்து பறித்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத புஷ்பா திருடன்..திருடன்... என கத்தினார். வெங்கட்ராமன் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அதற்குள் அந்த மர்ம நபர் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு யாரும் அங்கு வரவில்லை.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    நகை பறிப்பு நடந்த இடத்தின் அருகே பல்வேறு தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. அங்கு பொருத்தப்பட்டுள்ள உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் சமீப காலமாக தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×